ஓட்டப்பிடாரத்தில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு

ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, 
ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பொறியாளா்கள்.
ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பொறியாளா்கள்.

ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, பெங்களூரு பெல் நிறுவனப் பொறியாளா்கள் வியாழக்கிழமை சரிபாா்த்தனா்.

தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சித் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கம் மற்றும் மகளிா் வங்கி கட்டடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) சந்திரசேகரன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியை மேற்கொண்ட பெங்களூா் பெல் நிறுவனப் பொறியாளா்கள், அவை செயல்படும் விதம் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கினா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்(தோ்தல்) பொற்செழியன், ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப் பணி அடுத்த வாரம் முழுவதும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com