உப்பளத் தொழிலாளர்களிடம் கனிமொழி எம்.பி. குறைகேட்பு

தூத்துக்குடி சத்யா நகர் பகுதி உப்பளங்களுக்கு நேரில் சென்ற கனிமொழி எம்.பி. உப்பள தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி சத்யா நகர் பகுதி உப்பளங்களுக்கு நேரில் சென்ற கனிமொழி எம்.பி. உப்பள தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
 தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு கனிமொழி எம்பி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, திங்கள்கிழமை தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் உள்ள உப்பளங்களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை சந்தித்த கனிமொழி  குறைகளை கேட்டார்.
  அப்போது உப்பளத் தொழிலாளர்கள் தங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். மருத்துவ வசதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
  பின்னர்  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சில நாள்களுக்கு முன்பு உப்பளத் தொழிலாளர்கள் என்னை சந்தித்து இங்கே நிலவக்கூடிய பிரச்னைகள் குறித்து தெரிவித்தார்கள். அவர்களது பிரச்னைகளை நேரடியாக பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளேன். உப்பளத் தொழிலாளர்கள் தங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அந்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக நிறைவேற்றி தருவோம்.
  உப்பளத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழிலாளர்கள் முன்வைத்தனர். மேலும், மத்திய அரசு உப்பளத் தொழிலை கார்பரேட் நிறுவனம் போல் நடத்தாமல், கூட்டுறவு சங்கங்களை அமைத்து தொழிலாளர்கள் பயன்படும் வகையில் அதனை நடத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். 
  இந்த கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு  சென்று தீர்வு காண முயற்சி செய்வேன் என்றார் கனிமொழி. அப்போது,  வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதா ஜீவன் எம்எல்ஏ,  மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகரச் செயலர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com