சுடச்சுட

  

  தூத்துக்குடி அம்மா மருந்தகத்தில் புதன்கிழமை திடீரென தீவிபத்து நேரிட்டது. 
  தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைக்குச் சொந்தமான அம்மா மருந்தகம் தூத்துக்குடி டூவிபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கிருந்து புதன்கிழமை காலை 7 மணியளவில் திடீரென புகை கிளம்பியதால் அப்பகுதியைச் சேர்ந்தோர் பண்டகசாலைப் பதிவாளருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எனினும், ஏராளமான மருந்துகள், பொருள்கள் சேதமடைந்தன.
  தீவிபத்து குறித்து மத்திய பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai