சுடச்சுட

  

  "கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் நிற்கும்'

  By DIN  |   Published on : 12th September 2019 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இந்திய ரயில்வே வாரியம் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்களுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் 6 மாதங்கள் நின்று செல்வதற்காக மார்ச் 8 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கியிருந்தது. சோதனை அடிப்படையில் கோவில்பட்டியில் ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்கப்பட்ட காலம் முடியும் தருவாயில் உள்ளது. 
  இந்நிலையில், மறுஅறிவிப்பு வரும் வரை இந்த ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
  வண்டி எண். 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் 10.26 மணிக்கு கோவில்பட்டிக்கு வரும். கோவில்பட்டியில் இருந்து 10.28 மணிக்கு புறப்படும்.
  வண்டி எண். 16192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் கோவில்பட்டிக்கு 18.10 மணிக்கு வந்து சேரும். கோவில்பட்டியில் இருந்து 18.12 மணிக்கு புறப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai