சுடச்சுட

  

  ஓட்டப்பிடாரம் வட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பனை மர விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 
  ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் தனபதி தலைமை வகித்து பனை மர விதைகள் மற்றும் தேக்கு மரக்கன்றுகளை நட்டி, விவசாயிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கினார். 
  தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆசீர் கனகராஜ் பேசியது;  ஓட்டப்பிடாரம் வட்டத்தில்  நிகழாண்டு 6 மானாவாரி தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு,  ஒவ்வொரு தொகுப்பிலும் 50 ஆயிரம் பனை மர விதைகள் வீதம் மொத்தம் 3 லட்சம் விதைகள் மற்றும் தொகுப்பிற்கு 5 ஆயிரம் கட்டுமான மதிப்புள்ள மரக்கன்றுகளும்  நடவு செய்யப்பட உள்ளது என்றார் அவர்.
  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்ரமணியம்,  மத்திய அரசு திட்ட துணை இயக்குநர் தமிழ் மலர்,  ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சரவணன், ஸ்காட் வேளாண் அறிவியல் மைய முதன்மை விஞ்ஞானி சீனிவாசன், கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி வனவியல் துறை உதவி பேராசிரியர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  ஏற்பாடுகளை ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் அலுவலர் சுனில் கெளசிக், உதவி அலுவலர் மாயாண்டி,ஆத்மா திட்ட மேலாளர் சுடலைமணி, உதவி தொழில் நுட்ப மேலாளர் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai