சுடச்சுட

  

  கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை வளாக நேர்காணல்

  By DIN  |   Published on : 13th September 2019 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வளாக நேர்காணல் சனிக்கிழமை(செப்.14) நடைபெறுகிறது. 
  இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை:
  கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புத் துறை சார்பில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வளாக நேர்காணல் சனிக்கிழமை கல்லூரியில் நடைபெறுகிறது. 
  ஆந்திர மாநிலம், ஹிந்துப்பூரில் அமைந்துள்ள  மதர்சன் குழுமத்தைச் சேர்ந்த கிங்ஷின் இன்டஸ்ட்ரியல் மதர்சன் லிமிடெட் நிறுவனம் சார்பில் இந்த வளாக நேர்காணல் நடத்தப்படுகிறது. இதில் டிப்ளமோ பிரிவில் 2016 முதல் 2019ஆம் ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேசன் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் வளாக நேர்காணலில் பங்குபெறலாம். 
  வளாக நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியுடையவர்கள் தங்கள் பயோ-டேட்டா,  கல்வித் தகுதிக்கான அனைத்துச் சான்றிதழ்கள் (அசல் மற்றும் நகல்களுடன்) ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் இருக்க வேண்டும்.
  இந்த அரிய வாய்ப்பை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும் விவரங்களை w‌w‌w.‌l​a‌k‌s‌h‌m‌i​a‌m‌m​a‌l‌p‌o‌l‌y‌t‌e​c‌h‌n‌i​c.​c‌o‌m      என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai