சுடச்சுட

  

  சிவகளையில் காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் மறியல்

  By DIN  |   Published on : 13th September 2019 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகளையில் காவல்துறையினரை கண்டித்து பொது மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள்  புதன்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்த போது, ஏரல் உதவி காவல் ஆய்வாளர் ரெனிக்ஸ்  அந்த இளைஞர்களிடம் விசாரணை என்ற பெயரில் அடித்ததுடன்,  ஜாதி பெயரைக் கூறி திட்டிடனாராம்.  அப்போது சீருடை அணியாமல் இருந்த காவல் ஆய்வாளர் ரெனிக்சை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு கண்டித்தனராம்.  தகவல் அறிந்த  காவல் ஆய்வாளர் பட்டாணி  அங்கு சென்று உதவி காவல் ஆய்வாளர் ரெனிக்ஸை மீட்டுச் சென்றாராம்.
  இந்நிலையில், வியாழக்கிழமை சிவகளை பரம்பு பகுதியைச் சேர்ந்த  ஆண்களும்,  பெண்களும்  திரண்டு வந்து உதவி காவல் ஆய்வாளர் ரெனிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவி காவல் ஆய்வாளர்  ரெனிக்ஸ் பணியிடமாற்றம் செய்யப்படுவார் என போலீஸார் உறுதியளித்தார். இதையடுத்து  பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைதொடர்ந்து ஏரல் வட்டாட்சியர் அற்புதமணி,  சாலைமறியல் போராட்டத்திற்கான காரணம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai