சுடச்சுட

  

  வீரபாண்டியன்பட்டணத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
   மாநில இளைஞரணி துனை அமைப்பாளர் தாயகம்கவி எம்எல்ஏ தலைமை வகித்து   பேசினார். இளைஞரணி உறுப்பினராக 18 வயது முதல் 35 வயது வரையிலே சேர்க்க வேண்டும். நீர் நிலைகள் மற்றும் குளங்களை தூர்வார  இளைஞரணியினர் முன் வரவேண்டும். கிராமம், நகரங்களில் மரக்கன்றுகளை அதிக ளவில் நடுவதில் இளைஞரணியினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  நிகழ்ச்சியில்  ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணைச் செயலர் ஆறுமுகப் பெருமாள், திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் ஏ.பி.ரமேஷ், நகரச் செயலர் ஆர்.சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர்ரொட்ரிகோ, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமஜெயம், ஜனகர், ஜோதிராஜா, அனஸ், ஒன்றிய இளைஞரணி ஓட்டப்பிடாரம் மேற்கு அருள்ராஜ், கருங்குளம் வடக்கு ராமசாமி, சாத்தான்குளம் கார்த்திகேயன், திருவைகுண்டம் கிழக்கு ஜான்பாண்டியன், மேற்கு அருண்கிருஷ்ணன், உடன்குடி சிவபிரகாஷ், திருச்செந்தூர் ஜோசப்எடிசன், கருங்குளம் (தெற்கு) குமார், ஆழ்வை (மேற்கு) செந்தில்குமார், கிழக்கு அம்சராஜன், காயல்பட்டணம் கலீல்ரஹ்மான், மாவட்ட பிரதிநிதி சு.முத்துக்குமார், நகர தொழில் நுட்ப அணி அமைப்பாளர் க.நம்பிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai