சுடச்சுட

  

  ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு அருகே இளைஞர் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    வல்லநாடு அருகே உள்ள நாணல்காடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்  மகன் இசக்கி பாண்டியன்( 27). மாட்டு தரகரான  இவர் வியாழக்கிழமை இரவு  நாணல் காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றாராம்.  அகரம் விலக்கு பகுதியில் வரும் போது  அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் இசக்கி பாண்டியனை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே  பலியானார்.
  இது குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நாணல்காடு,  வல்லநாடு பகுதியில்  போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai