தூத்துக்குடி மாவட்டத்தில்  29 ஆயிரம் வழக்குகள் தேக்கம்: மாவட்ட முதன்மை நீதிபதி

தூத்துக்குடி மாவட்டத்தில் 29 ஆயிரம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன என்றும்

தூத்துக்குடி மாவட்டத்தில் 29 ஆயிரம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன என்றும் முதல் கட்டமாக 3,705 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு எட்டப்படும் என்றும் மாவட்ட முதன்மை நீதிபதி எம். சுரேஷ் விஸ்வநாத் என தெரிவித்தார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி சனிக்கிழமை (செப். 14) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் காசோலை மோசடி வழக்குகள், வங்கி வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், தண்ணீர் மற்றும் மின்வரி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சிறு,சிறு குற்ற வழக்குகள், விபத்து வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், வருவாய் வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், பேரணி போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தேசிய மக்கள் நீதிமன்த்தின்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 3,705 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலமாக ரூ.5 கோடிக்கும் மேல் வழக்குகளில் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி மூலமாக ரூ. 5 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டது. சனிக்கிழமை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி மாவட்டம் முழுவதிலும் 14 அமர்வுகளில் நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 29 ஆயிரம் வழக்குகள் தீர்வு எட்டப்படாத வழக்குகளாக நிலுவையில் உள்ளன. இதில், தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட வேண்டிய வழக்குகளாக 13 ஆயிரம் வழக்குகள் இனம் காணப்பட்டுள்ளன. அதில் இருந்து 3,705 வழக்குகள் முதற்கட்டமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com