"தூத்துக்குடியில் மத்திய பால் பண்ணை விரைவில் தொடங்கப்படும்'

தூத்துக்குடியில் விரைவில் மத்திய பால் பண்ணை தொடங்கப்படும் என்றார் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என். சின்னத்துரை. 

தூத்துக்குடியில் விரைவில் மத்திய பால் பண்ணை தொடங்கப்படும் என்றார் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என். சின்னத்துரை. 
தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆவின் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: தூத்துக்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. அனைத்து முகவர்கள் உதவியோடு விரைவில் 50 ஆயிரம் லிட்டர் விற்பனை என்ற இலக்கை அடைய வேண்டும்.
தற்போது மாவட்டத்தில் 6 மொத்த பால் குளிர்விப்பான் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நான் ஒன்றுக்கு 26 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் பல இடங்களில் ஆவின் பால் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. அந்தப் பகுதிகளில் முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இம் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய ஆவின் பார்லர்களை திறக்க உள்ளோம். தற்போது 37 ஆவின் பார்லர்கள் செயல்பட்டு வருகின்றன. ஆவின் பார்லர்கள் நடத்த விரும்புவோர் ஆவின் பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.
ஆவின் பால் உப பொருள்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் அதிக மக்கள் கூடும் கடற்கரை, பூங்கா அருகில் அதிநவீன வசதி கொண்ட ஹைடெக் பார்லர்கள் தொடங்கப்படும். மேலும், அதிநவீன இயந்திரங்கள் கொண்ட மத்திய பால் பண்ணையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார் அவர்.
 கூட்டத்தில், ஆவின் பொது மேலாளர் திரியேகராஜ் தங்கையா, விற்பனை மேலாளர் சாந்தி மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com