Enable Javscript for better performance
அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 14th September 2019 11:58 PM  |   அ+அ அ-   |    |  


    தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி, ஆட்சியரின் அனுமதியின்றி மாநகர, மாவட்டப் பகுதிகளில் தனியார், அரசு நிலம்,  கட்டடம், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொதுவெளிகளில் பொதுமக்கள், சாலைப் பயன்பாட்டாளர், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுமாறு விளம்பரம், வரவேற்புப் பதாகை, தட்டிகள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
    எனவே, அனுமதியின்றி விளம்பர, வரவேற்புப் பதாகை, தட்டிகள் வைத்தல் சட்டத்துக்கும், சென்னை உயர்நீதிமன்ற ஆணைகளுக்கும் எதிரானது. இந்த விதிமுறைகள்  இம்மாவட்டத்திலும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 
    எனவே, பொதுமக்கள் தங்களது வீட்டு பொது அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கு விளம்பரப் பலகைகள் வைக்க விரும்பினால், அரசால் வரையறை செய்யப்பட்ட படிவத்தை நிரப்பி, பேனர் வைக்கும் இடத்தின் எல்லைகளுக்கு உள்பட்ட காவல் நிலையம் வாரியாக தனித்தனியாக எத்தனை நாள்களுக்கு (அதிகபட்சம் 6 நாள்கள்), எவ்வளவு எண்ணிக்கையில், எந்த அளவுகளில் பேனர் வைக்கப்பட உள்ளது என்ற விவரங்களுடன் நிகழ்ச்சி நடைபெறும் 15 நாள்களுக்கு முன்னதாக ஆட்சியரிம் தாக்கல் செய்ய வேண்டும். 
    விண்ணப்பத்தை சரியாக நிரப்பி, உரிய அலுவலரிடம்  பெறப்பட்ட தடையின்மை சான்றுகளை இணைத்தும் மனுவை சமர்ப்பித்தால் 48 மணி நேரத்துக்குள் ஆட்சியரின்  அனுமதி வழங்கப்படும். 
    ஆட்சியரின் அனுமதி பெறாமல் பேனர்கள் வைப்பது சட்டவிரோதம். மீறி வைப்போர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நடைமுறையில் உள்ள சட்டவிதிப்படி குற்றமிழைப்போருக்கு ரூ. 5,000 அபராதம், ஓராண்டு சிறை விதிக்க வழிவகை உள்ளது என்றார் அவர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp