Enable Javscript for better performance
ஆத்தூர் பகுதியில் ரூ. 3.52 லட்சத்தில் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் பகுதியில் ரூ. 3.52 லட்சத்தில் போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகள்

    By DIN  |   Published on : 14th September 2019 09:20 AM  |   அ+அ அ-   |    |  

    ஆத்தூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட 22 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளை திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் பாரத் இயக்கி வைத்தார்.
    ஆத்தூர் காவல் நிலைய  எல்லைக்கு உள்பட்ட பழையகாயல், புல்லாவெளி, முக்காணி, மேலாத்தூர்விலக்கு, கீரனூர்விலக்கு உள்பட 22 இடங்களில் சாலை மற்றும் போக்குவரத்து குறித்த எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்குகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் தொடக்க  நிகழ்ச்சி  மேலாத்தூர் விலக்கில் நடைபெற்றது.   திருச்செந்தூர்  காவல் துணைக் கண்காணிப்பாளர் பாரத் தலைமை வகித்து எச்சரிக்கை விளக்குகளை இயக்கி வைத்தார். இதில்,  ஆத்தூர் காவல்  ஆய்வாளர் கிங்ஸ்லிலிதேவ் ஆனந்த் மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.

    kattana sevai