Enable Javscript for better performance
இடையன்விளை பதியில் திருஏடு வாசிப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இடையன்விளை பதியில் திருஏடு வாசிப்பு தொடக்கம்

    By DIN  |   Published on : 14th September 2019 09:26 AM  |   அ+அ அ-   |    |  

    நாசரேத் அருகேயுள்ள இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
    இவ்விழாவை அய்யாவின் அருளாளர்  ஐயன்சாமி தலைமை வகித்து  தொடங்கி வைத்தார். விழாவை முன்னிட்டு தினமும் நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அன்னதர்மமும் நடைபெறும். சாமித்தோப்பு முத்து நாயகம் குழுவினர் திருஏடு வாசிக்கிறார்கள். செப். 20ஆம் தேதி 8ஆம் திருநாளில்  இரவு 9 மணிக்கு திருக்கல்யாண வாசிப்பு, அய்யா கல்யாண ஊர்வல நிகழ்ச்சி நடைபெறும்.  செப். 22ஆம் தேதி 10ஆம் திருநாளில் பட்டாபிஷேகமும்,  மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.   பதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும்  ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 2 மணிக்கு அய்யா அருள் வாக்கு  அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
     

    kattana sevai