Enable Javscript for better performance
கடம்பாகுளம் பூலூடையார் சாஸ்தா கோயிலில்நாளை மகா கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கடம்பாகுளம் பூலூடையார் சாஸ்தா கோயிலில்நாளை மகா கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 14th September 2019 11:58 PM  |   அ+அ அ-   |    |  


    தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத பூலூடையார் சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (செப்.16) நடைபெறுகிறது.
    இவ்விழாவையொட்டி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், கோபூஜை,  நவக்கிரக ஹோமம், சுதர்ஸன ஹோமம், தனலட்சுமி பூஜை, அனுக்ஞை, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம்,  யாகபூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. சனிக்கிழமை யாகபூஜை, வேதபாராயணம், ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை, சதுர் வேதபாராயணம், திருமுறை ஓதுதல், திருமாங்கல்ய பூஜை ஆகியவை நடைபெற்றன.
    ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு யாகபூஜை, ஹோமம், வேதபாராயணம், தீபாராதனை, காலை 8.30 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, சதுர்வேத பாராயணம், திருமுறை ஓதுதல், மாலை 3 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு எந்திர ஸ்தாபனம், மாலை 6 மணிக்கு பூலூடையார் சாஸ்தாவிற்கு எந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் ஆகியன நடைபெறும்.
    திங்கள்கிழமை (செப்.16) காலை 8.30 மணிக்கு யாகபூஜை, பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், யாத்திரா தானம், கும்பங்கள் எழுந்தருளல் நடைபெறுகின்றன. காலை 9 மணிக்கு விமான அபிஷேகமும், காலை 10 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெறும். முற்பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.
    ஏற்பாடுகளை கோயில் கமிட்டித் தலைவர் எம்.வேல்சாமி, செயலர் கே.ஜெகதீசன், பொருளாளர் வி.காந்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
     

    kattana sevai