Enable Javscript for better performance
குரும்பூர் அருகே இளைஞர் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது- Dinamani

சுடச்சுட

    

    குரும்பூர் அருகே இளைஞர் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

    By DIN  |   Published on : 14th September 2019 09:23 AM  |   அ+அ அ-   |    |  

    குரும்பூர் அருகே இளைஞரை தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
    குரும்பூர் அருகேயுள்ள சோனகன்விளையை அடுத்த செந்தாமரைவிளை மேற்குத் தெருவைச் சேர்ந்த வனசேகர் மகன் துரைசெல்வம்(19). இவருக்கும், கிழக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் (44) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கோயில் கொடை விழா தொடர்பான பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தததாம்.
    இந்நிலையில் வியாழக்கிழமை அதே ஊரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டி இறுதி சடங்குக்கு இருதரப்பினரும் சென்றிருந்தனராம். அப்போது ஏற்பட்ட பிரச்னையில், முருகனும், அவரது மகன் முத்துசெல்வனும்(22) சேர்ந்து துரைசெல்வத்தை தாக்கினராம்.  இதில், காயமடைந்த அவர் அளித்த புகாரின்பேரில்,  குரும்பூர்  காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து தந்தை,மகனை கைது செய்து விசாரிக்கிறார்.
    ஆசிரியைக்கு மிரட்டல்: ஓட்டப்பிடாரம் வட்டம், புதுப்பச்சேரியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி மல்லிகா (53).  இவர், தெற்கு தொம்மையாபுரத்தில் அரசு நிதி உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியையாக உள்ளார். இப்பள்ளி மாணவிகள் இருவர் ஒழுங்காக பள்ளிக்கு வரவில்லையாம். இதுகுறித்து விவரம் அறிய, அந்த மாணவிகளின் வீடுகளுக்கு தலைமை ஆசிரியை சென்றுள்ளார். அப்போது, ஒரு மாணவியின் உறவினரான சுடலையாண்டி மகன் செல்வகுமார்(31), தலைமை ஆசிரியையிடம் தகராறு செய்து மிரட்டினாராம். இது குறித்த புகாரின்பேரில் பசுவந்தனை போலீஸார் வழக்குப்பதிந்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
     

    kattana sevai