Enable Javscript for better performance
கோவில்பட்டியில் 16இல் மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் 16இல் மின்தடை

    By DIN  |   Published on : 14th September 2019 09:21 AM  |   அ+அ அ-   |    |  

    கோவில்பட்டி நகராட்சி சாலை விரிவாக்கப் பணிக்காக மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதால் திங்கள்கிழமை (செப். 16) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    அதன்படி, கோவில்பட்டி பிரதான சாலை காமராஜர் சிலை முதல் சத்தியபாமா திரையரங்கு வரை, செளந்திரபாண்டியன் தெரு, தினசரி சந்தை, அருணாசலப்பேட்டைத் தெரு, கடலைக்காரத் தெரு 1- 2, தனுஷ்கோடியாபுரம் புதுத்தெரு, பத்திரகாளியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில்  காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளர் எம்.சகர்பான்  தெரிவித்துள்ளார்.
     

    kattana sevai