Enable Javscript for better performance
சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா

    By DIN  |   Published on : 14th September 2019 11:57 PM  |   அ+அ அ-   |    |  


    சாத்தான்குளம் அருள்மிகு கரையடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றது. 
    தொடக்கநாளன்று கணபதி ஹோமம், கோபூஜை, சீவலப்பேரி ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜை, லெட்சுமி பூஜை, சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, முளைப்பாரி ஊர்வலம், குடியழைப்பு, சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
    2ஆம் நாளான வெள்ளிக்கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பால் அபிஷேகம், உச்சிகால பூஜை,  சிறப்பு அலங்கார பூஜை, ஸ்ரீபேச்சிஅம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை,  அன்னதானம்,  நள்ளிரவு சுவாமிகளுக்கு படைப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.
    நிறைவு நாளான சனிக்கிழமை காலையில் சிறப்பு அன்னதானம், 10 மணிக்கு பொங்கலிடுதல், 12 மணிக்கு கிடா வெட்டுதல், சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. 
    ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வி.எஸ்.எம். முருகன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
     

    kattana sevai