Enable Javscript for better performance
தூத்துக்குடிக்கு இன்று ஜி.கே. வாசன் வருகை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடிக்கு இன்று ஜி.கே. வாசன் வருகை

    By DIN  |   Published on : 14th September 2019 09:25 AM  |   அ+அ அ-   |    |  

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சனிக்கிழமை (செப். 14) தூத்துக்குடி வருகிறார்.
    தூத்துக்குடி எஸ்டிஆர் மற்றும் அபி நிறுவனங்களின் நிறுவனர் எஸ். தர்மராஜ் நாடார் என்ற எஸ்.டி.ஆரின் திருவுருவ வெண்கலச் சிலை திறப்பு விழா கோரம்பள்ளம் எஸ்டிஆர் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (செப்.14) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.   இவ்விழாவுக்கு, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகிக்கிறார். நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே.வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எஸ்.டி.ஆரின் சிலையை திறந்துவைக்கிறார். 
     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.டி.ஆர். பொன்சீலன், எஸ்.டி.ஆர்.விஜயசீலன், எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ் மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
     

    kattana sevai