Enable Javscript for better performance
தூத்துக்குடியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கத் தடை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கத் தடை

    By DIN  |   Published on : 14th September 2019 09:26 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான வீ.ப. ஜெயசீலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி, அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்பது தடைசெய்யப்பட்டு உள்ளது. மேலும் உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் விளம்பர பதாகைகள் (டிஜிட்டல் பேனர்கள்) வைக்கக் கூடாது எனத் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த உத்தரவை மீறும் அச்சக உரிமையாளர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்போர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்வதுடன் பொது இடங்களில் அசுத்தம் செய்வதை தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    kattana sevai