Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் 169 மில்லி மீட்டர் மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில் 169 மில்லி மீட்டர் மழை பதிவு

    By DIN  |   Published on : 14th September 2019 09:27 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக மணியாச்சி பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டம் முழுவதும் 169 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
     வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தென்மேற்கு பருவ காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய அளவு மழை ஏதும் பெய்யவில்லை. இருப்பினும், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைப் பகுதியில் பெய்த மழை காரணமாக விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைத்தது.
    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை திடீரென மழை பெய்தது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும், 4 மணி வரை தூறிக் கொண்டே இருந்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.
     மாவட்டத்தில் அதிகபட்சமாக மணியாச்சி பகுதியில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. வைப்பாறு பகுதியில் 22 மில்லி மீட்டரும், விளாத்திகுளம் பகுதியில் 21 மில்லி மீட்டரும், கழுகுமலை பகுதியில் 17 மில்லி மீட்டரும், காடல்குடி பகுதியில் 14 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரம் பகுதியில் 13 மில்லி மீட்டரும், காயல்பட்டினம் மற்றும் கடம்பூர் பகுதிகளில் 10 மில்லி மீட்டருமாக மாவட்டம் முழுவதும் 169.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. எனினும், மாநகரப் பகுதியில் 0.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியது. மாவட்டத்தில் சராசரி மழை அளவு 8.93மி.மீ. ஆகும்.
     

    kattana sevai