Enable Javscript for better performance
பிச்சிவிளையில் ஆன்மிக விநாடி- வினா போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பிச்சிவிளையில் ஆன்மிக விநாடி- வினா போட்டி

    By DIN  |   Published on : 14th September 2019 09:16 AM  |   அ+அ அ-   |    |  

    திருச்செந்தூர் அருகே பிச்சிவிளையில் இந்து முன்னணி சார்பில் ஆன்மிக விநாடி - வினாடி போட்டிகள் நடைபெற்றன.
    தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் ரகு தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய பொதுச் செயலர் கேசவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், சிறுவர், சிறுமியருக்கு ஆன்மிக சிந்தனை ஊட்டும் விதமாக  ராமாயணம், மகாபாரதம் பண்பாட்டு வகுப்பு நடத்தப்பட்டது.  தொடர்ந்து  ஆன்மிக விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு இந்து அன்னையர் முன்னணி மாநில  பொறுப்பாளர் மாயக்கூத்தன் பரிசுகள் வழங்கினார்.  நிகழ்ச்சியில் இந்து முன்னணி கிளை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    kattana sevai