Enable Javscript for better performance
புறையூரில் தூய்மை பாரதவிழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    புறையூரில் தூய்மை பாரதவிழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 14th September 2019 11:57 PM  |   அ+அ அ-   |    |  


    குரும்பூர் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் தூய்மை பாரதம் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    தலைமையாசிரியர் சுரேஷ் நியூமன் தலைமை வகித்து பேரணியை தொடங்கிவைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர், மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பள்ளிமுன் தொடங்கிய இப்பேரணி புறையூர், ஓடக்கரை பகுதி வரை சென்றது. 
    இதில், புறையூர் வெல்பேர் டிரஸ்ட் நிறுவனர் நாசர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். துணை தலைமையாசிரியர் பெல்சியா நன்றி கூறினார்.
     

    kattana sevai