கொட்டங்காடு கோயில் கொடை விழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன்தொடங்கியது. 
கொட்டங்காடு கோயில் கொடை விழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை  யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கும், பவள முத்து விநாயகர், கொடிமரத்துக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், ஊஞ்சல் சேவை, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

செப். 27ஆம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை,  8 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 2, நள்ளிரவு 12  மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 28ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு பூஞ்சப்பரத்தில் தேவி பத்திரகாளி அம்மன், பவளமுத்து விநாயகர் வீதியுலா நடைபெறும். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சப்பரம் கோயிலை வந்தடைந்தவுடன் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். 29ஆம் தேதி காலை 8 மணிக்கு உணவு எடுத்தல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ. சுந்தரஈசன், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com