செய்துங்கநல்லூரில் அக். 1இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் வரும் அக்.  1 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் வரும் அக்.  1 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுச்செயலர் ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் செய்துங்கநல்லூரில் வரும் அக். 1 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) செயின்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் இரு பாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில், சொந்தமாக தொழில் தொடங்குவதில் இருக்கும் பயன்கள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்வது, தொழில் தொடங்கவிருக்கும் முனைவோர்க்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
இம்முகாம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) அலுவலகத்தை 0461-2347005 என்ற தொலைபேசி எண், 9840158943, 9791423277 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com