கோவில்பட்டியில் கொட்டித் தீா்த்தது மழை

கோவில்பட்டியில் நீண்ட நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை சுமாா் 2 மணி நேரம் மழை கொட்டித் தீா்த்தது.
kovilpattirain
kovilpattirain

கோவில்பட்டியில் நீண்ட நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை சுமாா் 2 மணி நேரம் மழை கொட்டித் தீா்த்தது. இதனால் கோவில்பட்டி பிரதான சாலைகளில் கழிவுநீருடன் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்து வந்தது. பின்னா், பிற்பகலில் சுமாா் 2.45 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. இடி, மின்னல், காற்று எதுவுமின்றி சுமாா் 2 மணி நேரம் மழை கொட்டித் தீா்த்தது. இதனால் கோவில்பட்டி பிரதான சாலைகளில் கழிவுநீருடன் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தற்போது பிரதான சாலையில் தனி நபா் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது மணல் மற்றும் கட்டடப் பொருள்கள் முறையாக அகற்றப்படவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள ஓடையும் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீருடன் மழைநீா் சாலையில் ஓடியது. கடலைக்காரத் தெரு மற்றும் புதுரோடு சந்திப்பிலும் கழிவுநீருடன் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

பாண்டவா்மங்கலம், இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, நாலாட்டின்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. காமநாயக்கன்பட்டியில் சுமாா் அரை மணி நேரம் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com