Enable Javscript for better performance
கோவில்பட்டியில் நாளை நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் நாளை நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு

    By DIN  |   Published on : 25th September 2019 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் வியாழக்கிழமை(செப். 26)  நடைபெறும் சிறப்பு முகாமில், நரிக்குறவர் நல வாரிய உறுப்பினராக சேர பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டத்தில் நரிக்குறவர் நல வாரியத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் வழங்கும் சிறப்பு முகாம்  வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
    இந்த முகாமில் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களாக பதிவு செய்பவர்கள் 18 வயது பூர்த்தி செய்தும், 60 வயதிற்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். ஏற்கெனவே அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள கட்டணம் தேவையில்லை. இருப்பிடம் மாறினால் புதிய முகவரியை வாரியத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.  நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தவர்களுக்கு விபத்து நிவாரணத் தொகை, திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச் சடங்கு உதவித் தொகை, கண் கண்ணாடி உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை ஆகிய விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீது தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலகம் வழியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த முகாமை பயன்படுத்தி  அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன், புதிய அடையாள அட்டை பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai