Enable Javscript for better performance
திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கயத்தாறையடுத்த சன்னதுபுதுக்குடி அருகே சுமை ஆட்டோவில் இருந்த டயரை திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  
    திருவாரூர் மாவட்டம், திட்டானிமுட்டம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் பக்ரிசாமி மகன் சுரேஷ்(36). சுமை ஆட்டோ ஓட்டுநரான இவர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய  ஒப்பந்த வேலைக்கான வாகனத்தை ஓட்டி வந்த இவர், திங்கள்கிழமை இரவு சன்னதுபுதுக்குடி பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு எதிர்புறம் சுமை ஆட்டோவை நிறுத்திவிட்டு அதனருகே உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணிக்கு பார்த்த போது சுமை ஆட்டோ வாகனத்தின் மேற்கூரையில் இருந்த டயரை எடுத்துவிட்டு இளைஞர் ஒருவர் இறங்குவதைப் பார்த்தாராம். அதனையடுத்து, அவரைப் பிடித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 
    போலீஸார் நடத்திய விசாரணையில் அவர், கங்கைகொண்டான் நேதாஜி நகரைச் சேர்ந்த சித்திரை மகன் முனியாண்டி(36) என்பது தெரியவந்தது. அதையடுத்து போலீஸார்  அவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai