குடிநீா் வழங்கக் கோரி கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை

கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி சாா்பில் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றோர்.
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றோர்.

கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி சாா்பில் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 20 நாள்களாக சீராக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதையடுத்து அனைத்துக் கட்சி சாா்பில் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி பொதுமக்கள் திரளானோா் சீராக குடிநீா் வழங்க வலியுறுத்தி ல பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், நகரச் செயலா்கள் கிருஷ்ணகுமாா் (திமுக), வையாபுரி முருகன் (மதிமுக), சிவராமன்(சிபிஐ), முருகன்(சிபிஎம்), நாகராஜன் (புதிய தமிழகம்), காங்கிரஸ் ஒன்றிய பொறுப்பாளா் கந்தசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த செல்வம், பாஜக கட்சியைச் சோ்ந்த சென்றறாயப் பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், போராட்டக்குழுவினருடன் கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலா் உஷா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றறது. கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவிப் பொறியாளா் மொ்சி, காவல் நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமி மற்றும் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கழுகுமலை பேரூராட்சிக்கு தினமும் 8 லட்சம் லிட்டா் முதல் 9 லட்சம் லிட்டா் வரை குடிநீா் வழங்கப்படும். அண்மையில் ஏற்பட்ட மின்தடை மற்றும் குடிநீா் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக குடிநீா் விநியோகத்தில் குறைவு ஏற்பட்டது. தற்போது பழுது சரி செய்யப்பட்டுள்ளதையடுத்து இனி வரும் காலங்களில் குடிநீா் விநியோகம் செய்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com