திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.63 கோடி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்டம்பர் மாதம் ரூ.1.63 கோடி   உண்டியல் மூலம் வருவாய் கிடைத்தது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்டம்பர் மாதம் ரூ.1.63 கோடி   உண்டியல் மூலம் வருவாய் கிடைத்தது.
இத் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்  மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி செப்டம்பர் மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை தலைமையில் நடைபெற்றது.  உதவி ஆணையர்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூர் வே.செல்வராஜ், ஆய்வாளர் மு.முருகன், தக்கார் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் சு.வேலாண்டி,  இரா.மோகன், ச.கருப்பன், இரா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில், செப்டம்பர் மாதத்தில் கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ.  1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 638, தற்காலிக உண்டியலில் ரூ. 10 ஆயிரத்து 23,  கோசாலை உண்டியலில் ரூ.  86 ஆயிரத்து 949 , யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. 15 ஆயிரத்து 155,  திருக்கோயில் அன்னதான உண்டியலில் ரூ.  8 லட்சத்து 15 ஆயிரத்து 522,  சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ. 14 ஆயிரத்து 9  என மொத்தம் ரூ.  1 கோடியே 63 லட்சத்து 26 ஆயிரத்து 296,  தங்கம் 1961 கிராம், வெள்ளி 9,715 கிராம், பித்தளை 9,500 கிராம், செம்பு 950 கிராம், தகரம் 3000 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 218-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com