தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்  ரூ. 125 கோடியில் 25 மெகாவாட்  மின் உற்பத்தி காற்றாலை அமைக்க ஆய்வு

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 125 கோடியில்,  25 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை அமைப்பது தொடர்பான ஆய்வுப் பணி தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ. 125 கோடியில்,  25 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை அமைப்பது தொடர்பான ஆய்வுப் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  புதிய தொழில்நுட்பங்கள்,  புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியைப் பயன்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 25 மெகாவாட் மின்சக்தி கொண்ட காற்றாலைகளை துறைமுகக் கடலோரம், கடல் பகுதிகளில் ரூ. 125 கோடியில் அமைக்கவுள்ளது.
காற்றாலைகள் நிறுவ சாத்தியமான பகுதிகளைக் கண்டறியவும், காற்றாலைத் திறன், கோபுரங்களின் உயரம் ஆகியவற்றைக் கணக்கிடும் காரணிகளான காற்றின் திசைவேகம், வெப்பநிலை போன்ற பல்வேறு காரணிகளை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னையைச் சேர்ந்த தேசிய காற்று சக்தி நிறுவனம் ஆய்வுப் பணி மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, வ.உ.சி. துறைமுகப் பகுதியில் உள்ள பல்வேறு கட்டடங்களின் மேற்கூரையில் 5,530 சதுரமீட்டர் பரப்பில் 1,779 சட்டங்கள் நிறுவப்பட்டு மாதத்துக்கு தோராயமாக 5,800 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
துறைமுக நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரையில் சூரியசக்தி மின்ஆலை நிறுவப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு 476 மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும். மேலும், துறைமுகம் பல்வேறு பசுமைத் திட்டங்கள் துறைமுக கப்பல் தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களுக்கு மின்சாரம் வழங்குதல், சூரிய மின்சக்தி தயாரிப்பு, ஹப்பர்களில் தூசி தடுக்கும் கருவிகளைப் பொருத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்திய பெருந்துறைமுகங்களுக்குள் கார்பன் தடத்தைக் குறைப்பதில் முதன்மையாகவும், முன்மாதிரியாகவும் வஉசி துறைமுகம் திகழும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com