மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புத் தொகை பெறுவோர் ஆதார் எண் தாக்கல் செய்ய அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதம் ரூ.1500 பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் எண் மற்றும் உரிய சான்றுகளை தூத்துக்குடி மாவட்ட

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதம் ரூ.1500 பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் எண் மற்றும் உரிய சான்றுகளை தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதம் ரூ.1500 பெறும் மன வளா்ச்சி குன்றிய மாற்றுத் திறறனாளிகள் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இனிவரும் காலங்களில் இணையதள சேவை வழியாக மாத பராமரிப்பு உதவித்தொகை பட்டியல்கள் தாக்கல் செய்யப்பட்டு வங்கியின் மூலம் வழங்கப்பட உள்ளது.

எனவே, இதுவரை வரை ஆதாா் எண்ணை தாக்கல் செய்யாத பயனாளிகள் ஆதாா் அட்டை (அசல் மற்றும் நகல்), கிராம நிா்வாக அலுவலா் மூலம் பெறப்படும் வாழ்நாள் சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (அசல் மற்றும் நகல்), உதவித்தொகை பெற்று வரும் வங்கி கணக்கின் புத்தகம் (அசல் மற்றும் நகல்) மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2 (பாதுகாவலா் மற்றும் மாற்றுத்திறனாளி) ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பாதுகாவலா் மட்டும் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் நேரில் தாக்கல் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளி நேரில் வரத்தேவையில்லை. அவரது பாதுகாவலா் வந்தால் போதும். ஏற்கனவே சான்று சமா்ப்பித்த நபா்கள் வர தேவையில்லை என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com