Enable Javscript for better performance
ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

    By DIN  |   Published on : 29th September 2019 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்குகிறது.
    இக்கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை கொலு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும் அம்மன் கோயில் கொடிமர முன் மண்டபத்தில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    ஞாயிற்றுக்கிழமை அன்னபூரணி அம்மன் திருக்கோலத்திலும், திங்கள்கிழமை மீனாட்சி அம்மன் திருக்கோலத்திலும், செவ்வாய்க்கிழமை ஆதிபராசக்தி அம்மன் திருக்கோலத்திலும், புதன்கிழமை முருக பெருமானுக்கு அம்மன் வேல் வழங்கும் கோலத்திலும், வியாழக்கிழமை கன்னிகா பரமேஷ்வரி திருக்கோலத்திலும், வெள்ளிக்கிழமை அம்மன் சிவ பூஜை செய்யும் திருக்கோலத்திலும், சனிக்கிழமை அம்மன் பள்ளி கொண்ட திருக்கோலத்திலும், ஞாயிற்றுக்கிழமை (அக்.6) மகாலெட்சுமி திருக்கோலத்திலும், திங்கள்கிழமை (அக்.7) சரஸ்வதி திருக்கோலத்திலும், செவ்வாய்க்கிழமை (அக்.8) தசரா திருநாளன்று துர்க்கை அம்மன் திருக்கோலத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 
    இதையொட்டி நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு நவராத்திரி திருவிழா சிறப்பு வழிபாட்டுடன், சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு அபிராமி அந்தாதி திருமுறையும் நடைபெறுகின்றன.
    மேலும், ஆறுமுகனேரியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களிலும் நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai