Enable Javscript for better performance
திருச்செந்தூரில் வீடு இடிந்து விழுந்து இளைஞர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் வீடு இடிந்து விழுந்து இளைஞர் காயம்

    By DIN  |   Published on : 29th September 2019 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருச்செந்தூரில் வீடு இடிந்து விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.
    திருச்செந்தூர், வீரமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துஈஸ்வரன் (21). இவரது தந்தை இறந்து விட்டார். தாய் ராமலெட்சுமியுடன் வசித்து வரும் இவர், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கினாராம். சனிக்கிழமை காலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai