Enable Javscript for better performance
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் பாகற்காய் யாகம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் பாகற்காய் யாகம்

    By DIN  |   Published on : 29th September 2019 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    தூத்துக்குடி, கோரம்பள்ளம் ஸ்ரீசித்தர்நகரில் உள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி- காலபைரவர் சித்தர் பீடத்தில், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி சனிக்கிழமை பாகற்காய் யாகம் நடைபெற்றது.
    பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன், எதிரித் தொல்லைகள் நீங்கவும், செல்வவளம், கல்விவளம் பெருகவும், நோயற்ற வாழ்வு அமையவும் வேண்டி சீனிவாச சித்தர் தலைமையில் பாகற்காய் சிறப்பு மஹா யாக வழிபாடு நடைபெற்றது. காலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் ஹோமம், பகலில் பாகற்காய் சிறப்பு மஹா யாகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் யாக குண்டத்தில் பாகற்காய், மிளகாய் வற்றல், நவதானியங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றை இட்டு வழிபட்டனர்.
    தொடர்ந்து,  பிரத்தியங்கிராதேவி - காலபைரவருக்கு பால் உள்பட 16 வகை பொருள்களால் அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு யாக வழிபாட்டில் திரைப்பட நடிகை கே.ஆர். விஜயா தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். அவரது சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai