ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்குகிறது.


ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்குகிறது.
இக்கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை கொலு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும் அம்மன் கோயில் கொடிமர முன் மண்டபத்தில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை அன்னபூரணி அம்மன் திருக்கோலத்திலும், திங்கள்கிழமை மீனாட்சி அம்மன் திருக்கோலத்திலும், செவ்வாய்க்கிழமை ஆதிபராசக்தி அம்மன் திருக்கோலத்திலும், புதன்கிழமை முருக பெருமானுக்கு அம்மன் வேல் வழங்கும் கோலத்திலும், வியாழக்கிழமை கன்னிகா பரமேஷ்வரி திருக்கோலத்திலும், வெள்ளிக்கிழமை அம்மன் சிவ பூஜை செய்யும் திருக்கோலத்திலும், சனிக்கிழமை அம்மன் பள்ளி கொண்ட திருக்கோலத்திலும், ஞாயிற்றுக்கிழமை (அக்.6) மகாலெட்சுமி திருக்கோலத்திலும், திங்கள்கிழமை (அக்.7) சரஸ்வதி திருக்கோலத்திலும், செவ்வாய்க்கிழமை (அக்.8) தசரா திருநாளன்று துர்க்கை அம்மன் திருக்கோலத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். 
இதையொட்டி நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு நவராத்திரி திருவிழா சிறப்பு வழிபாட்டுடன், சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு அபிராமி அந்தாதி திருமுறையும் நடைபெறுகின்றன.
மேலும், ஆறுமுகனேரியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களிலும் நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com