ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நவராத்தி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆறுமுகனேரி கோயில்களில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நவராத்தி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை கொலு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுவாமி சன்னதி முன்புறறமுள்ள கொடிமர முன்பு மண்டபத்தில் கொலு அமா்த்தப்பட்டுள்ளது.

அன்னப்பூரணி ஞாயிற்றுக்கிழமை கொலு மண்டபத்தில் அம்பாளாக எழுந்தருளி பக்தா்களுக்கா காட்சி அளித்தாா்.

மாலையில் சாயரட்சை பூஜையை தொடா்ந்து நவராத்திரி சிறறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி, பாராயணங்கள் நடைபெற்றன. ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் அம்மன் சுப்பிரமணியராக காட்சி அளித்தாா். இரவில் சிறறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றது.

விநாயகா் கோயில் தெருவிலுள்ள அருள்மிகு சந்தனமாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில், நடுத்தெருவில் உள்ள ராமலெட்சுமி அம்மன் கோயில், இலங்கத்தம்மன் கோயில், வாலவிளை முத்தாரம்மன் கோயில், மேலத்தெரு முத்தாரம்மன் கோயில், பத்திரகாளி அம்மன் கோயில், வடக்கு சுப்பிரமணியபுரம் முத்தாரம்மன் கோயில் உள்பட நகரிலுள்ள 30 க்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com