காந்தி ஜெயந்தி: அக். 2இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள், 2003இன் பிரிவு 12 துணை விதி (1)இன்படி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகள்,  அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மது விற்கக் கூடாது. அதை மீறி, மது விற்பனை, மது கடத்தல், மதுவைப் பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com