கோவில்பட்டி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 


புரட்டாசி 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 8  மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
விழாவில், மண்டகப்படிதாரரான தொழிலதிபர் தன்ராஜ்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதுபோல், வடக்கு இலுப்பையூரணி அருள்மிகு அலமேலு மங்கா சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
சாத்தான்குளம்: சாத்தான்குளம் தச்சமொழி இந்து நாடார்  உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பெருமாள் சுவாமி கோயிலில், சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், அம்மன், பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com