கோவில்பட்டியில் மகா சத சண்டி யாகம் தொடக்கம்

கோவில்பட்டி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் ஸ்ரீ மகா சத சண்டி யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 


கோவில்பட்டி அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயிலில் 3 நாள்கள் நடைபெறும் ஸ்ரீ மகா சத சண்டி யாகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
உலக நலனுக்காகவும், மக்களுக்கு சகல ஐஸ்வர்யமும் கிடைக்க  வேண்டியும் நடைபெறும் இந்த யாகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 5  மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், மகாசண்டிவேதிகார்ச்சனை, ஸ்ரீ லலிதாத்ருசதி ஹோமம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 
சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாசண்டிவேதிகார்ச்சனை, சதசப்தஸதீ பாராயணம், லலிதா ஸகஸ்ரநாம ஹோமம், நண்பகல் 12 மணிக்கு த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 
இதில், நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம், சங்க நிர்வாகிகள் சுரேஷ்குமார், ஆர்.எஸ்.ரமேஷ், மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மகாசத சண்டியாகம், தீப பூஜை, சங்கு பூஜையைத் தொடர்ந்து, வடுகபிரம்மச்சாரி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, கன்யாபூஜை, சுவாசினி பூஜை, மகா பூர்ணாஹுதி, கலசாபிஷேகம், மகா கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com