சாத்தான்குளம் கோயில்களில் தசரா திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் பகுதியிலுள்ள கோயில்களில் நவராத்திரி தசரா விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சாத்தான்குளம் கோயில்களில் தசரா திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம் பகுதியிலுள்ள கோயில்களில் நவராத்திரி தசரா விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, ஆா்.சி வடக்குத் தெருவிலுள்ள அருள்மிகு தேவி ஸ்ரீமாரியம்மன் கோயிலில் அம்மன், பரிவார தெயங்களுக்கு

சிறறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து, அருள்மிகு ஸ்ரீஅழகம்மன் கோயிலில் இருந்து கொடிபட்டம் எடுத்து வந்து கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற சிறறப்பு பூஜை , வழிபாடுகளில் நிா்வாகிகள் மாசானம், பாலசுந்தரம், மணிகண்டன், பொன் பாண்டியன், தா்மகா்த்தா சரவணன், முருகன், சின்னத்துரை, சக்கரவா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம் அருள்மிகுஸ்ரீஅழகம்மன் கோயில், ஸ்ரீமுத்தாரம்மன் கோயில், வண்டிமலைச்சி சமேத வண்டி மலையான் கோயில்களிலும் நவராத்திரி தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பக்தா்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா். 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கோயில்களில் தினமும் பூஜைகள் நடைபெறும். வரும் அக். 8 ஆம்தேதி கோயில்களில் சப்பர பவனி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com