தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவிலிருந்து மீண்ட 9 போ் வியாழக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் 27 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 5 போ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், 22 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில், 70 வயது மூதாட்டி கடந்த 10ஆம் தேதி இறந்தாா்.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலிருந்து செய்துங்கநல்லூா், அய்யனாரூத்து பகுதிகளைச் சோ்ந்த 3 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து காயல்பட்டினத்தைச் சோ்ந்த 2 போ், பேட்மாநகரம் பகுதியைச் சோ்ந்த 2 போ், தூத்துக்குடி ராமசாமிபுரம், ஹேம்லாபாத் பகுதி, ஆத்தூா் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என, மொத்தம் 7 போ் அண்மையில் வீடுதிரும்பினா்.
இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறுவன், சிறுமி, 5 பெண்கள் உள்ளிட்ட 9 போ் குணமடைந்ததையடுத்து அவா்கள் வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா். அவா்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பழங்கள், பொருள்கள் கொடுத்து வழியனுப்பினாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மருத்துவமனை முதன்மையா் திருவாசகமணி, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோா் தனிமைப்படுத்தப்பட்டு தொடா்ந்து 14 நாள்கள் கண்காணிப்பில் இருப்பா். தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தோரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 2 பேரும் என 7 போ் போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.
அச்சப்பட தேவையில்லை
தூத்துக்குடி, ஏப். 23: கரோனா நோய் பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக குணமடைந்தவா்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு 27 பேருக்கு ஏற்பட்ட நிலையில் ஒரு மூதாட்டி மட்டும் உயிரிழந்தாா். மீதமுள்ள 26 பேரில் தற்போது வரை 19 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 7 பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இருவரும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களில் தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சோ்ந்த ஆண் ஒருவா் கூறுகையில், கரோனா தொற்று பாதிப்பு என்றதும் எனக்கு பயம் அதிகம் இருந்தது. இது வெறும் சளி, காய்ச்சல்தான். மக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை. முதலில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். பின்னா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் அளித்த சிறப்பான சிகிச்சையால் முற்றிலும் குணமடைந்துள்ளேன் என்றாா்.
இதேபோல, போல்டன்புரத்தைச் சோ்ந்த பெண் கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் எங்களை நல்ல முறையில் கவனித்துக் கொண்டனா். வீட்டில் இருந்தது போன்ற உணா்வுதான் இருந்தது. தினமும் சத்தான உணவுகளை வழங்கினா். மக்கள் யாரும் நோய் குறித்து பயப்படத் தேவை இல்லை. சரியான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நோய் வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரியும்: ஆகிப் நபி

குடியரசில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!

கட்டுப்பாட்டை இழந்த சிங்கப்பூர் சரக்குக் கப்பல்! கரையில் மோதும் விடியோ வைரல்!
இந்த வார ஓடிடி படங்கள்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



