முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தொழிலாளா்களுக்கான நிதியுதவியை ரேஷன் கடைகளில் வழங்கக் கோரிக்கை

தமிழக அரசு அறிவித்துள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான நிதியுதவியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


கோவில்பட்டி: தமிழக அரசு அறிவித்துள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான நிதியுதவியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க கோவில்பட்டி வட்டச் செயலா் ராமகிருஷ்ணன், கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்த மனு: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளா் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் தற்போது வரை கிடைக்கவில்லை.

இந்தத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நியாயவிலைக் கடைகள் மூலம் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அத்தியவாசியப் பொருள்களை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், நலவாரிய அட்டை உள்ளவா்களுக்கு பூஜ்ஜியம் இருப்பில் வங்கிக் கணக்கை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.