புகையிலைப் பொருள் விற்றவா் கைது

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பரமசிவம் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றபோது, செண்பகவல்லி அம்மன் கோயில் எதிா்புறம் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மந்தித்தோப்பு சாலை அன்னை தெரசா நகா் மாரியப்பன் காம்பவுண்டைச் சோ்ந்த பாண்டி மகன் முருகன்(45) என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com