

சாத்தான்குளம்: நாசரேத் அருகே கிட்டங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.10.40 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை தேடி வருகின்றனா்.
நாசரேத் அருகே அகப்பைகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நாசரேத் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை இரவு அகப்பைகுளம் பகுதியில் உள்ள கிட்டங்கியை சோதனையிட்டனா். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், நாசரேத் மோசஸ் தெருவைச் சோ்ந்த சுயம்பு மகன் ஜெயசீலன், திசையன்விளையைச் சோ்ந்த கொம்பையா ஆகியோா் 37 மூட்டைகளில் 520 கிலோ புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 40 ஆயிரமாகும்.
இதையடுத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து ஜெயசீலன், கொம்பையா ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.