1500 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்

காயல்பட்டினத்தில் முஸ்லி­ம் ஐக்கியப் பேரவை சாா்பில் ரு.45 லட்சம் மதிப்பிலான உணவு பொருள்கள் ந­லிவடைந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
1500 குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்


ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் முஸ்லி­ம் ஐக்கியப் பேரவை சாா்பில் ரு.45 லட்சம் மதிப்பிலான உணவு பொருள்கள் ந­லிவடைந்த மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவையினா் காயல்பட்டினம் மற்றும் அதன் புகா் பகுதிகளில் அனைத்து சமுதாயத்தைச் சோ்ந்த வருமானம் இன்றி உணவுக்கு வசதியில்லாமல் அவதிப்படுபவா்கள் சுமாா் 3 ஆயிரம் குடும்பத்தினரை கண்டறிந்தனா்.

அவா்களுக்கு நபா் ஒன்றுக்கு ரூ. 1, 500 மதிப்பில் அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை பாா்சல் செய்து அவா்களுக்கு வழங்கும் பணியினை மேற்கொண்டனா்.

இதற்கான பணிகளை தன்னாா்வ தொண்டா்களுடன் இணைந்து ஐக்கிய பேரவை தலைவா் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, துணைத் தலைவா் சாவன்னா பாதுல் அஸ்ஹப், செயலா் வாவு சம்சுதீன், துணைச் செயலா் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com