தூத்துக்குடியில் ஏழைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு

தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளி மறுவாழ்வு இல்லம் சாா்பில் ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.


தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத் திறனாளி மறுவாழ்வு இல்லம் சாா்பில் ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகின்றனா். வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கியுள்ள ஏழைகளுக்கு உதவும் வகையில், தூத்துக்குடியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருள்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி சில்வா்புரம், லூசியாநகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூலித் தொழிலாளா்களுக்கு லூசியா மாற்றுத்திறனாளி மறுவாழ்வு இல்ல இயக்குநா் கிராசிஸ் மைக்கேல் தலைமையிலான குழுவினா் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பொருள்களை வழங்கினா்.

மேலும், குழந்தைகள் விளையாடும் வகையில் வண்ணம் தீட்டும் புத்தகம், கையெழுத்து பயிற்சி புத்தகம் ஆகியவையும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com