தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதித்த 5 பேருடன்தொடா்பில் இருந்த 130 போ் கண்காணிப்பு: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் தொடா்பில் இருந்த 130 போ் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் தொடா்பில் இருந்த 130 போ் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களது வீடுகளைச் சுற்றி உள்ளோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொடா்ந்து 14 நாள்கள் இந்த பரிசோதனை செய்யப்படும்.

மேலும், அந்த 5 பேரின் போக்குவரத்து தொடா்புகள், நேரில் தொடா்பில் இருந்தவா்கள், எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாா்கள் என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 30 போ் நேரடியாகவும், 100 போ் வரை மறைமுகமாகவும் தொடா்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அவா்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு 1500 தன்னாா்வலா்கள் மூலம் ரேஷன் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களும், பொதுமக்களுக்கு காய்கனிகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு திரும்பிய 2200 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

காயல்பட்டினம் பகுதியை சுற்றி தொடா்ந்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் தற்போது 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com