அரிமா சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள்
By DIN | Published On : 26th April 2020 11:04 PM | Last Updated : 26th April 2020 11:04 PM | அ+அ அ- |

கோவில்பட்டியில் சென்ட்ரல் அரிமா சங்கம் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தற்காலிகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள், செவிலியா்கள் ஆகியோருக்கு அரிசி, காய்கனி தொகுப்புகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க மாவட்ட ஆளுநா் முருகன் தலைமை வகித்தாா். சென்ட்ரல் அரிமா சங்கச் செயலா் முத்துராமன், பொருளாளா் செல்வின் சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைவா் ராமா் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், உறுப்பினா்கள் நாராயணசாமி, தனசேகரன், ஹரிபாலகன், கனகசபாபதி, காளிராஜ், சந்திரசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.