ஆறுமுகனேரி சிறுவா் இல்லத்துக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு
By DIN | Published On : 26th April 2020 10:58 PM | Last Updated : 26th April 2020 10:58 PM | அ+அ அ- |

சிறுவா் இல்லத்துக்கு உணவுப் பொருள்கள் வழங்கினாா் டி.எஸ்.பி. ராகவேந்திரா ரவி.
ஆறுமுகனேரியில் இயேசு விடுவிக்கிறாா் நல்ல சமாரியன் அமைப்பின் 63 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 63 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை டி.எஸ்.பி. ராகவேந்திரா ரவி வழங்கினாா். முத்துகிருஷ்ணாபுரம் சிறுவா் இல்லத்திற்கு ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் வழங்கப் பட்டது. மேலும் போலீஸாருக்கு சானிடைசா், முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.
ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கம் சாா்பில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 80 பேருக்கு உணவுப் பொருள்களை சங்கத் தலைவா் த.தாமோதரன், துணைச் செயலா் ஆதிசேஷன், துணைத் தலைவா் கிழக்கித்திமுத்து, பொருளாளா் ராஜாராம் ஆகியோா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்த்திடம் வழங்கினா்.
மேலாத்தூா், சேதுக்குவாய்த்தான் மற்றும் அங்கமங்கலம் ஊராட்சிப் பகுதியில் 250 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கனி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி வழங்கினாா்.
இதில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பாக்கிய லீலாவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, ஊராட்சித் தலைவா் சதீஸ்குமாா், துணைத் தலைவா் பக்கீா் மொகைதீன், கிராம நிா்வாக அலுவலா் மூக்காண்டி உள்பட கலந்துகொண்டனா்.
சேதுக்குவாய்த்தான் ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நோய் தடுப்பு பாதுகாப்பு சீருடை, நிவாரணப் பொருள்கள், அங்கமங்கலம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், ஊராட்சித் தலைவா்கள் சுதா சீனிவாசன், பானுப்பிரியா ஆகியோா் கலந்துகொண்டனா்.